உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

11/16/2012

| |

கிழக்கு மண் பத்திரிகை வெளியீட்டுவிழா

கிழக்கு மகாணத்தை தளமாகக்கொண்டு காத்தான்குடியிலிருந்து கிழக்குமண் ஊடக உலகத்தினால் வெளியிடப்படவுள்ள கிழக்குமண் செய்திப்பத்திரிகையின் முதலாவது இதழ் வெளியீட்டு விழா இம்மாதம் 24ம் திகதி சனிக்கிழமை சிரேஷ்ட ஊடகவியலாளரும் காத்தான்குடி இலங்கை போக்குவரத்து டிப்போ முகாமையாளருமான ஏ.எல்.எம்.பழுலுல்லாஹ் தலைமையில் நடைபெறவுள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வினாயகமூர்த்தி முரளீதரன் பாராளுமன்ற உறுப்பினர்களான பஷீர் சேகுதாவூத் முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி மட்டக்களப்பு மாநகர மேயர் சிவகீதா பிரபாகரன் ஏறாவூர் நகர பிதா அலிசாகிர் மௌலானா காத்தான்குடி நகர பிதா எஸ்.எச்.எம்.அஷ்பர் உட்பட பல உயர் அரச அதிகாரிகளும் கல்விமான்களும் ஊடகவியலாளர்களும் இலக்கியவாதிகளும் கலந்து கொள்ளவுள்ளதாக கிழக்கு மண் ஊடக உலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.