உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

11/06/2012

| |

கொழும்பு – சியோல் நேரடி விமான சேவை

கொழும்பிற்கும் தென் கொரியாவின் தலைநகரான சியோலிற்கும் இடையிலான நேரடி விமான சேவை அடுத்த மாதத்திலிருந்து ஆரம்பமாகும் என இலங்கைக்கான தென் கொரிய தூதுவர் ஜோங்மூன் சோய் அறிவித்தார்.
தென் கொரியாவின் தேசிய தினம் நேற்று திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு கொழும்பிலுள்ள தென் கொரியா தூதுவரவயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதான நிகழ்வு கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டோலொன்றில் இடம்பெற்றது.
இதன்போதே இலங்கைக்கான தென் கொரிய தூதுவர் ஜோங்மூன் சோய் இந்த அறிவிப்பை விடுத்தார். "பல வருடங்களுக்கு முன்னர் கொழும்பிற்கும் சியோலிற்கும் இடையிலான நேரடி விமான சேவை இடம்பெற்றது. எனினும் சில காரணங்களினால் 1984ஆம் ஆண்டு இந்த சேவை இடைநிறுத்தப்பட்டது" என அவர் தெரிவித்தார்.
எனினும் தற்போது இரு நாடுகளுக்கும் இடையில் இராஜந்திர ரீதியிலான உறவு சிறந்த முறையில் உள்ளது. இதனாலேயே இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமான சேவை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது என தென் கொரியா தூதுவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கல்வி, தகவல் தொழிநுட்பம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு போன்ற பல துறைகளுக்கு தென் கொரியா தொடர்ந்து இலங்கைக்கு உதவும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.