உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

11/24/2012

| |

ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

 மண்முனைப்பற்று பிரதேச கல்விக் கோட்டத்திலுள்ள ஆரையம்பதி மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள மஹிந்தோதய ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.
இதேவேளை, இவ் வைபவத்தில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பூ.பிரசாந்தன், மற்றும் பாடசாலை அதிபர் தங்கவடிவேல், மண்முனைப்பற்று பிரதேச சபையின் தலைவர் திருமதி கிறிஸ்டினா சசிகரன்  உட்பட பாடசாலை ஆசிரியர்கள், மண்முனைப்பற்று பிரதேச முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்னடர்.
இந்த ஆய்வுகூடம் சுமார் பத்து மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இதேவேளை, மட்டக்களப்பு இந்துக் கல்லூரியிலும்; 80 இலட்சம் செலவில் விஞ்ஞான ஆய்வு கூடம் அமைக்கப்படவுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
கல்லூரி அதிபர் எஸ்.அருள்பிரகாசம்  தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீதா பிரபாகரன் பிரதம அதிதியாக  கலந்துகொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.