Election 2018

11/24/2012

| |

கன்னன்குடா மகா வித்தியாலயத்தின் ஆய்வுகூடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

ஆயிரம் இடை நிலைப்பாடசாலைகளை அபிவிருத்திசெய்யும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட கன்னன்குடா மகா வித்தியாலயத்தின் ஆய்வுகூடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (23.11.2012) இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் புலேந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதியாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன், உதவிக்கல்விப்பணிப்பாளர் சிறிநேசன்,கோட்டக்கல்விப்பணிப்பாளர், உட்பட பலர் கலந்துகொண்டனர்.
சுமார் 80 இலட்சம் ரூபா செலவில் ஆய்வுகூடம்,தகவல் தொழில்நுட்ப கூடம் உட்பட பல வசதிகளைக்கொண்டதாகவும் இரு மாடிக்களைக்கொண்டதாகவும் இது அமைக்கப்படவுள்ளது.