11/15/2012

| |

அவுஸ்திரேலியாவின் நவுறுத் தீவு முகாமிலுள்ளவர்களின் நிலை கவலைக்கிடம்; நவநீதம்பிள்ளை குற்றச்சாட்டு


அவுஸ்திரேலியாவின் நவுறு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தஞ்சக் கோரிக்கையாளர்களின் நிலைமை மிக மோசமாக நிலையில் உள்ளதாக ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை குற்றஞ்சாட்டியுள்ளார்.
தஞ்சம்கோரி சென்று முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், வாழ்வதற்கு தேவையான உணவின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள தஞ்சக் கோரிக்கையாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.  மிகவும் மோசமாக அமைந்துள்ள முகாம்களுக்குள் தங்கியிருந்தும் தாங்கிக் கொள்ள முடியாத நிலையிலும், உண்ணாவிரதம் இருக்கின்றமை கவலையளிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அவுஸ்திரேலிய அரசாங்கம் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் கடந்த செப்டம்பர் மாதம் கடல் செயலாக்கக் கொள்ளையை வெளியிட்டிருந்தது.
அக்கொள்கையிள் படி, அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக தஞ்சம்கோரி வருவோரை நவுறு தீவிற்கு அனுப்பி வந்தது. ஆனால் தற்போது பாப்புவா நியூகினி தீவுக்கு அனுப்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.