உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

11/06/2012

| |

தலாய்லாமாவின் ஜப்பானியப் பயணம் பற்றிய சீனாவின் கடும் எதிர்ப்பு

எந்த நாடுகளும், எவரும் எந்த வழிமுறைகளின் மூலமாகவும் தலாய்லாமாவின் பிரிவினை நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதைச் சீனா உறுதியாக எதிர்க்கிறது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹோங் லேய் 5ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார். தலாய்லாமா ஜப்பானில் இருப்பது குறித்து ஜப்பானியத் தரப்புக்குச் சீனா கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
செய்தி ஊடகங்களின் கூற்றுப்படி, தலாய்லாமா 4ஆம் நாள் ஜப்பான் சென்று, கூறப்படும் மத நடவடிக்கையை மேற்கொண்டு, அந்நாட்டின் அரசியல் நபர்களுடன் தொடர்பு கொண்டார். இது குறித்து, ஹோங் லேய் பேசுகையில், சீனாவுக்கு எதிரான சர்வதேசச் சக்தியுடன் கள்ளத்தனமாக கூட்டுச் சேர்ந்து பிரிவினை நடவடிக்கையை மேற்கொண்டு, சீனாவுக்கும் தொடர்புடைய நாடுகளுக்குமிடை உறவைச் சீர்குலைப்பது, தலாய்லாமா மேற்கொண்ட சர்வதேசச் செயல்பாடுகளின் முக்கிய நோக்கமாகும் என்று வலியுறுத்தினார்