உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

11/07/2012

| |

மாகாணசபை உறுப்பினர் ஜனாவை காணவில்லை?முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய மாகாணசபை உறுப்பினருமான ஜனா செட்டிபாளையம் பகுதியிலிருந்து தலைமறைவாகியுள்ளார். பிரித்தானியாவிலிருந்து ஏகப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளுடன் செட்டிபாளையத்திற்கு வந்திறங்கிய ஜனா உங்களை
கஷ்டமானதோர் காலகட்டத்தில் விட்டுவிட்டு ஓடியிருந்தேன், ஆனால் அத்தவறை மேலுமொருமுறை செய்யமாட்டேன் என வாக்குறுதி அளித்து அரும்பொட்டில் ஆசனத்தை பெற்ற அவர் தற்போது தலைமறைவாகியுள்ளார். 

தமிழீழ விடுதலை இயக்கம் எனப்படுகின்ற ரெலோவில் இருந்து பல கொலை கொள்ளைகளைச் செய்து குறுக்கு வழியால் பாராளுமன்றத்துக்குள் நுளைந்து. மக்களுக்கு எதுவும் செய்யாமல் சொத்துச் சேர்த்ததுடன். இருபது வருடங்களுக்கு மேலாக வெளிநாட்டில் இருந்து, கடந்த மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு ஆசனத்தை கைப்பற்றியுள்ள அவர் பழைய குருடி கதவை திறவடி என தொழிலை ஆரம்பித்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது. அடிக்கடி கொழும்பு சென்று வரும் அவர் தாவலுக்கு தயாராவதாகவும் நம்பகரமாக அறியக்கிடைக்கின்றது. 

மக்கள் ஜனாவின் செட்டிபாளையத்தில் இருக்கின்ற வீட்டிற்கும் மட்டக்களப்பில் இருக்கின்ற வீட்டிற்கும் அலைந்து திரிகின்றனர். செட்டிபாளையத்திற்கு சென்றால் மட்டக்களப்பில் இருக்கின்றார் என்றும் மட்டக்களப்பிற்கு சென்றால் செட்டிபாளையத்தில் இருக்கின்றார் என்றும் சொல்லப்படுகின்றதாம்.

இது ஒரு புறமிருக்க ஜனா மீண்டும் தனது ஆயுதக் குழுவை றோவின் அனுசரணையுடன் இயங்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கு ஐரோப்பிய நாடுகளிலுள்ள சில உதிரிகள் ஒத்தாசை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது. 

எது எப்படி இருப்பினும் தேர்தல் காலங்களில் வீர வசனங்கள் பேசி தமிழ் மக்களின் வாக்குக்களை பெற்று ஆசனங்களை கைப்பற்றிய பின்னர் மக்களை கைவிடுவது தமிழ் அரசியல் வட்டாரத்தில் ஜனா முதலாம் மனிதர் அல்ல என்பதும் குறிப்பிடப்படவேண்டியதாகும்.*

இலங்கைநெற்