11/18/2012

| |

சிவில் பாதுகாப்புக் குழுவின் செயற்பாட்டு மீளாய்வு கூட்டம்


மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 'சிவில் பாதுகாப்பு குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பான் மாநாடு' கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தலைமையில் இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு வின்சனட் உயர்தர மகளிர் பாடசாலையில் இடம்பெற்றது.
இம்மாநாட்டில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிர்வாகத்திற்குள் உள்ளடங்கும் ஊர்களில் அமைக்கப்பட்டுள்ள சகல சிவில் பாதுகாப்புக் குழுக்கள் பற்றிய பயன்பாடுகள் ஆராயப்பட்டதோடு எதிர்காலத்தில் சிவில் சமூகமும் பொலிஸாரும் இணைந்து எவ்வாறு பாதுகாப்பானதொரு சூழலை அமைக்கலாம் என்பது பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.
இதேவேளை, 'அவ்விடத்தில் சேவை' என்ற அடிப்படையில் கருத்தரங்கில் கலந்து கொண்டோரிடமிருந்து கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் வேண்டுகோளின் பேரில் முறைப்பாடுகளும் ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்பட்டன.
சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக சிவில் சமூகமும் பொலிஸாரும் பரஸ்பரம் இணைந்து செயலாற்ற வேண்டியதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.
இம்மாநாட்டடில் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆ லோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மாநகர மேயர் திருமதி சிவகீதா பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவில் சமூக பிரதிநிதிகள், பிரதேச செயலாளர்கள், கிராமசேவை உத்தியோகத்தர்கள், அரச உயரதிகாரிகள், சர்வதேச நிறுவனமான ஆசிய பவுண்டேசன் உட்பட பல அரசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமய பெரியார்கள், பொலிஸ் உயர் மட்ட அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.