11/23/2012

| |

கிழக்கு மாகாண முதலமைச்சர் காத்தான்குடிக்கு விஜயம் செய்யவுள்ளார்

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக இம்மாதம் 27ஆம் திகதி காத்தான்குடிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
கிழக்கு மண் ஊடக உலகத்தின் கிழக்கு மண் செய்திப்பத்திரிகை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொள்வதற்காகவே இவர் காத்தான்குடிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் மூத்த ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.பழுலுல்வாஹ் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், விநாயகமூர்த்தி முரளிதரன்,  நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,  முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, மட்டக்களப்பு மாநகரசபை மேயர் சிவகீதா பிரபாகரன், கல்முனை மேயர் சிறாஸ் மீராசாகிபு, ஏறாவூர் நகரபிதா அலிசாகிர் மௌலானா உட்பட பலர் கலந்து கொள்ளவுளனர்.