11/15/2012

| |

மேலும் வீழ்ச்சி கண்டது இலங்கையின் வேலையின்மை வீதம்!

இலங்கையின் வேலையின்மை வீதம், இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மூன்று புள்ளி ஒன்பது சதவீதம் என வீழ்ச்சி கண்டுள்ளதாக குடிசன மதிப்பு 

புள்ளி விபரத் தினைக்களம் வெளியிட்டுள்ள 

அறிக்கையில் தெரிவித்துள்ளது. குறிப்பாக பெண்களின் வேலையின்மை (5.9%) 

விரைவாக வீழ்ச்சி கண்டு வருவதாக புள்ளிவிபரத் 

தரவுகள் காட்டுகின்றன. இலங்கையில் தற்போது இடம்பெற்று வரும் மீள் நிர்மானத் துறைகள் மற்றும் புதிய சிறு மற்றும் நடுத்தர முயற்சிகள் அதிகளவனோருக்கு வேலை வாய்ப்பினை வழங்கி வருகின்றன. எனினும், வடகிழக்கு மாகாணங்களில் உள்ள வேலையின்மை வீதமானது ஓர் மிதமான 

நிலையிலேயே வீழ்ச்சி கண்டு வருவதுடன், இங்கு அதிகளவான வேலை வாய்ப்புகள் (நிரந்தர நியமனமல்லாத) ஒப்பந்த அடிப்படையிலேயே 

இடம்பெற்று வருகின்றன.  இதேவேளை, இலங்கையின் தேசிய ரீதியான 

வேலையின்மை வீதமானது சென்ற 2009, 2010, 2011 ஆகிய ஆண்டுகளில் முறையே 5.8%, 4.9%, 4.2% என படிப்படியாக வீழ்ச்சி கண்டு வருவதாக குடிசன மதிப்பு புள்ளி விபரத் தினைக்களத்தின் அறிக்கை காட்டுகின்றது.