11/14/2012

| |

கூட்டமைப்பினரின் ஆட்சியில் உள்ள பிரதேச சபைகளில் ஏற்பட்டு வரும் குளறுபடிகள்


 நாவிதன்வெளி பிரதேச சபை,காரைதீவு பிரதேச சபை,போன்ற சபைகளில் ஒழுங்காக நிர்வாகம் நடைபெற வில்லை என்று மக்கள் ஆர்ப்பட்டங்களை ஈடுபட்டு வருகின்றனர் .கட்சி கிளைகளோ,அலுவலகமோ, இன்றிய நிலையில்     கட்சி நடத்தும் கூ ட்டமைப்பினருக்கு உணர்வுகளில் ஏமாந்து வாக்களித்தால் இதுதான் நிலை. பிரதேச சபைகளை கூட ஆட்சி செய்ய முடியாத இவர்கள் தமிழ் மக்களுக்கு விடுதலை பெற்று தர போகிறர்களாம்.மட்டகளப்பு மாவட்டத்திலுள்ள எட்டு சபைகளும் தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் ட்சியில் இருப்பதால் இன்று வரை அமைதியும் அபிவிருத்தியும் அங்கு தொடருவதை மக்கள் எண்ணி பார்க்க வேண்டும்.

காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் செல்லையா இராசையாவின்  அடாவடித்தனத்தைக் கண்டித்து  இன்று புதன்கிழமை பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டமொன்றில்  பிரதேச சபை முன்பாக ஈடுபட்டனர். மக்கள் ஆர்ப்பாட்டத்தில் பதாகைகளுடன் நிற்பதையும் தாக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் வாக்குமுலமளித்தனர்.
முன்னறிவித்தலின்றி தொழிலி; இருந்து நீக்கப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக மீண்டும் சேர்க்கவேண்டும்.நள்ளிரவில் அடியாட்களுடன் வந்து அப்பாவி மீனவர்களை தாக்கிதோடு வீட்டை உடைத்தமையை கண்டிக்கிறோம்.
தவிசாளரை கட்சியிலிருந்தும் பதவியிலிருந்தும் தூக்கவேண்டும்.மக்களைக் காக்க வேண்டிய தவிசாளர் இரவில் வந்து தாக்குவதூ? மண்டை உடைக்கப்பட்டவர் இன்றும் ஆஸ்பத்திரியில் ஆனால் அடித்த தவிசாளர் எ.சி. அறையில் .இதுதானானா நியாயம்? என்று கோசமெழுப்பினர்.
சக்தி மீன்பிடிச்சங்க பொரளாளர் கோவிந்தன் த.தே.கூட்டமைப்பு முக்கியஸ்தர் கே.ஜெயசிறில் பாதிக்கப்பட்ட ராசாவின் மனைவி வசந்தி வீடுஒடைக்கப்ட்ட வீட்டுக்காரர் புஸ்மலர் ஆகியோரும் வேலையிலிருந்து நீக்கப்பட்ட தொழிலாளர்கள் இருவரும் அங்கு ஊடகங்களுக்கு குரல் கொடுத்தனர்.

கடந்த 2011ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிட்டு பிரதேச சபையை கைப்பற்றி தவிசாளராக கலையரசன் தலைமையில் ஆட்சியமைத்தது இந்நிலையில் கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கலையரசன் போட்டியிட்டு மாகாணசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து இப்பிரதேச சபையின் தவிசாளர் வெற்றிடத்திற்கு  தமிழ்தேசிய கூட்டமைப்பு கட்சி பிரதேச சபை உறுப்பினரான சிவலிங்கம் குணரட்ணத்தின் பெயரை உள்ளுராட்சி ஆணையாளருக்கு சிபார்சு செய்ததையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை வாத்;தமானியில் இவரது பெயர் வெளியிடப்பட்டு இவரை தவிசாளராக பொறுப்பேற்குமாறு கடிதம் வழங்கப்பட்டு சமாதான நீதவான் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டு இன்று திங்கட்கிழமை சம்பிராயபூர்வமாக பெறுப்பேற்றுள்ளார்

இந் நிலையில் இவ் புதிய தவிசாளர் நியமனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து உப தவிசாளரான அமரதாச ஆனந்தன் தமது ஆதரவாளர்களுடன் பிரதேச சபைக்கு முன்னால் காலை 11 மணிதொடக்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றார் இதில் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஓழிக , கலையரசனின் கபடநாடகத்தில் குணரட்ணம், போன்ற சுலோகங்களும் கோஷங்களும் எழுப்பியவாறு 50 பேர் வரையிலானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்