11/11/2012

| |

முன்னாள் SLMM உறுப்பினர் இஸ்ஸதீனின் வீடு தாக்கப்பட்டுள்ளது

DSC08440மட்டக்களப்பு காத்தான்குடியிலுள்ள முன்னாள் இலங்கை போர் நிறுத்த கண்கானிப்புக்குழுவின் அரச தரப்பு உறுப்பினரும் முஸ்லிம் சமாதான செயலகத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளருமா எஸ்.எம். இஸ்ஸதீன் என்பவரின் வீடு இன்று (10.11.2012)அதிகாலை இனந்தெரியாதோரினால் தாக்கப்பட்டுள்ளது.

இதனால் இவரின் வீட்டுயன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்துள்ளதுன் வீட்டின் கதவுகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
காத்தான்குடி பௌஷி மாவத்தை (ரெலிகொம் வீதி)யிலுள்ள மேற்படி இல்லத்தில் வீட்டு உரிமையாளாரான முன்னாள் இலங்கை போர் நிறுத்த கண்கானிப்புக்குழுவின் அரச தரப்பு உறுப்பினரும் முஸ்லிம் சமாதான செயலகத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளருமா எஸ்.எம்.இஸ்ஸதீன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது இன்று அதிகாலை 2.30 மணியளவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இவரின் வீட்டின் நாளாபுறத்திலுமுள்ள யன்னல் கண்ணாடிகள் உடைத்து சேதப்பட்டுள்ளதுடன் வீட்டின் முன் கதவும் கத்தியால் கொத்தி சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக இஸ்ஸதீன் தெரிவித்தார்.
மேற்படி இஸ்ஸதீன் என்பவர் சமூக சேவையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.