12/17/2012

| |

மட்டக்களப்பில் மினி சூறாவளி: 25இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பிரதேசங்களில் இன்று அதிகாலை வீசிய மினி சூறாவளி காரணமாக 25இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நாவற்குடா இந்து கலாசார மண்டபம், மாநகரசபை பொதுச்சந்தை உட்பட கல்லடி நொச்சிமுனையில் உள்ள வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று இரவு தொடக்கம் பலத்த காற்று வீசத் தொடங்கியதாகவும் இன்று அதிகாலை மினிசூறாவளி ஏற்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
தற்போது சேதமடைந்த வீடுகள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டுக் வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.