உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

12/06/2012

| |

ஊழல் அற்ற நாடுகள் தரவரிசையில் 79வது இடத்தில் இலங்கை

ஊழல் அற்ற நாடுகளின் தரவரிசை பட்டியலில் 176 நாடுகள் இடம்பெற்றுள்ளன. அதில் 40 புள்ளிகளை பெற்று இலங்கை 79வது இடத்தில் உள்ளது.
உலகில் ஊழல் நிறைந்த நாடுகள் தரவரிசை பட்டியலை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலின் பிரகாரம் சீனா 80 ஆவது இடத்திலும் இந்தியா 94 ஆவது இடத்திலும் இருக்கின்றன. 
தெற்காசிய நாடுகளான இந்தியா,நேபாளம்,பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் இலங்கை இரண்டாம் இடத்தில் இருக்கின்றது என அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த பட்டியலின் பிரகாரம் டென்மார்க் ஊழல் அற்ற நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஊழல் கூடிய நாடுகளாக மியான்மார், சூடான், ஆப்கானிஸ்தான், சோமாலியா மற்றும் வடகொரியா உள்ளிட்ட நாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஊழல் கூடிய நாடுகளில் சில நாடுகள் பூச்சியம்(0) புள்ளியை பெற்றுள்ளன என்றும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் சுட்டிக்காட்டியுள்ளது.