உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

12/10/2012

| |

எனக்கு பன்றி இறைச்சி வேண்டும்: ஜோன் அமரதுங்க

நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் பன்றி இறைச்சி கறி பரிமாறப்பட்ட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க கோரியுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற நாடாளுமன்ற குழுக் கூட்டத்திலேயே எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா ஜோன் அமரதுங்க இந்த கோரிக்கையினை சபாநாயகரிடம் விடுத்துள்ளார்.

இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு சபாநாயகர் இணக்கம் தெரிவித்துள்ளார். எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் உள்ளிட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆட்சேபனையை அடுத்து சபாநாயகர் இந்த தீர்மானத்தினை கைவிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் எனக்கு பன்றி இறைச்சி கறி வேண்டும். இதனை சபாநாயகர் நிறைவேற்றுவார் என நான் நம்புகின்றேன் என ஜோன் அமரதுங்க குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸி சேனநாயாக்கவின் கோரிக்கையினை அடுத்து தேன் மற்றும் விசேட வகையான தானிய உணவுகளை நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் பரிமாற்ற சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.

இவைகள் ஆரோக்கியமான உணவு வகைகளாகும். மாவினால் தயாரிக்கப்பட்ட பொருட்களை உண்பதை விட இவற்றை உண்பது மிக சிறந்ததாகும் என  சபாநாயகர் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிற்றுண்டிசாலையில் பரிமாறப்படும் உணவு வகைகளின் தரத்தினை கண்கானிப்பை மேற்கொள்ளும் பொறுப்பு ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸி சேனநாயாக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற நாடாளுமன்ற குழுக் கூட்டத்திலேயே சபாநயகர் சமல் ராஜபக்ஷவினால் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸி சேனநயாக்கவிடம் இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.