12/14/2012

| |

களுவங்கேணி மக்களால் ஜனாதிபதியின் விசேட ஆலோகருக்கு வரவேற்புகளுவங்கேணி  ிராம  க்களால் முன்னாள் முதல்வரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஜனாதிபதியின் விசேட ஆலோசகருமான சிவனேசதுரை – சந்திரகாந்தன் அவர்களை வரவேற்கும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் சந்திரகாந்தன் அவர்களுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பிரசாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஒருங்கிணைந்த நிறுவனங்களின் பணிப்பாளர் மோகன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்ததுடன், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், கிராம அபிவிருத்திச சங்கம் மற்றும் பெருமளவிலான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
நிகழ்வுகளின்போது, கடந்த காலங்களில் பெருமளவில் தமது பிரதேசத்திற்கு அபிவிருத்திகளை மேற்கொண்ட  முன்னாள் முதல்வரிடம் தொடர்ந்தும் மக்கள் தமது குறைகளை தெரிவித்ததுடன், தமது தேவைகளை நிறைவேற்றித் தரும்படியும் வேண்டினர். நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினரால் நினைவுச் சின்னம் ஒன்றும் முதல்வருக்கு வழங்கப்பட்டிருந்தது.