12/21/2012

| |

வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்க பொருட்கள் கொள்வனவு செய்யும் முன்னாள் முதலமைச்சர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கான நடவடிக்கையை கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் மேற்கொண்டுவருகின்றார்.
வெல்லாவெளி மற்றும் வவுணதீவு பிரதேச மக்களுக்கு பாய், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட நிவாரணங்களை வழங்குவதற்காக கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் பொருட்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவரது ஊடக இணைப்பாளர் A.தேவராஜன் தெரிவித்தார்.
இவர் தனது  சொந்த நிதியிலிருந்து நிவாரணப் பொருட்களை கொள்வனவு செய்துவருகின்றார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இப்பொருட்களை இன்றும் நாளையும் நேரடியாகச் சென்று வழங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.