12/17/2012

| |

குருணாகல் மாவட்டத்தினைச் சேர்ந்த சிங்கள இளைஞர், யுவதிகள் ஐம்பது பேர் மட்டக்களப்பு விஜயம்

தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் இனங்களுக்கிடையே பரஸ்பர நட்புறவை பரிமாறிக்கொள்ளும் இளைஞர் பரிமாற்றுத் திட்டத்திற்கமைவாக குருணாகல் மாவட்டத்தினைச் சேர்ந்த சிங்கள இளைஞர், யுவதிகள் ஐம்பது பேர் கொண்ட குழு ஒன்று  வியாழக்கிழமை (13.12.2012)  மட்டக்களப்புக்கு வருகை தந்துள்ளனர்.
இவர்கள் மட்டக்களப்பு எருவில் கிராமத்திலுள்ள இளைஞர், யுவதிகளின் வீடுகளில் தலா ஒருவர் வீதம் நேற்றிலிருந்து தொடர்ந்து ஐந்து நாட்கள் தங்கியிருப்பார்கள் என தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் கே.தவராஜா தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை காலை இவ்விளைஞர், யுவதிகளை வரேவேற்கும் நிகழ்வு எருவில் கண்ணகியம்மன் ஆலயத்தில் வைத்து நடைபெற்றது.
இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் கே.தவராஜா உட்பட இளைஞர்சேவை உத்தியோகஸ்தர்கள் இளைஞர் கழகங்கள், பெதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
குருணாகலிலிருந்து வந்த சிங்கள இளைஞர், யுவதிகள் மாவட்டத்திலுள்ள மக்களின் கலை, காலாசார பண்பாட்டு அம்சங்களை பகிர்ந்து கொள்வதுடன் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மதஸ்தலங்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் மாவட்டத்தின் முக்கியமான இடங்களை சுற்றிக் காண்பிக்கவுள்ளதாகவும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திக் கிழக்குமாகாண பணிப்பாளர் கே.தவராஜா தெரிவித்தார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மட்டக்களப்பைச் சேர்ந்த ஐம்பது இளைஞர், யுவதிகள் குருணாகல் மாவட்டத்திற்குச் சென்று அங்குள்ள இளைஞர், யுவதிகளுடனும் மக்களுடனும் தொடர்ந்து ஐந்து நாட்கள் தங்கியிருந்து அம்மக்களுடன் பழகி அம்மக்களின் கலை, கலாசார, பாண்பாடுகளையும் கண்டுகளித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.