உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

12/18/2012

| |

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அணி அங்குரார்ப்பண நிகழ்வில் அமளிதுமளி

பணம் சேர்த்தல், பதவி ஆசை என்பன தற்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களிடையே பல்வேறு குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றமையினை அண்மைக்கால நிகழ்வுகள் எடுத்து விளக்குகின்றன. அந்தவகையில் இன்று (16.12.2012) மட்டக்களப்பில் இளைஞர் அணி அங்குரார்ப்பண நிகழ்வில் இடம்பெற்ற குழப்பகரமான நிலையும் இதற்கு ஒரு சிறந்த சான்றாகும்.
தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி அங்குரார்ப்பண நிகழ்வில் கல்குடா பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பங்குபற்றிய சேயோன் தலமையிலான அணியினருக்கும், வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் விளையாட்டு உத்தியோகஸ்த்தராக கடமைபுரியும் பூபாளன் என்பவருடைய குழவினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு அந்நிலை கைகலப்பில் முடிவடைந்தது. உண்மையில் இந்த முறுகல் நிலையின் பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான இன்னுமோர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பழைய அரசியல்வாதி ஆகியோருக்கிடையே நிலவிவரும் உள்முரண்பாடகளே காரணம் எனக் கூறப்படுகின்றது.
பாராளுமன்ற உறுப்பினரான யோகேஸ்வரன் கடந்த பாராளுமன்றத் தேர்தல் காலத்திலே ஏணைய பாராளுமன்ற உறுப்பினர்களை விட அதிக வாக்குகளை தமிழரசுக் கட்சி சார்பாக பெற்றிருந்தார். இந்த நிலைமை சக பாராளுமன்ற உறுப்பினர்களிடையே குறிப்பாக ஆரம்பகாலத்திலிருந்தே தமிழரசுக்கட்சியில்  அங்கம் வகித்து பாராளுமன்ற உறுப்பினாகளாக இருந்த சிலருக்கு எரிச்லை உண்டு பண்ணியிருந்தது. அதாவது நாம் பல வருடமாக அரசியிலில் இருக்கின்றோம் ஆனால் எம்மை விட இவன் (யோகேஸ்வரன் ) அதிக வாக்குகளைப் பெற்றுவிட்டானே என்று பழைய அரசியல் வாதியும் பாராளுமன்ற உறுப்பினருமான ஒருவர் புலம்பியிருந்தார். இதனால் தமிழரசுக் கட்சியில் இருந்து யோகேஸ்வரனின் ஆதிக்கத்தை குறைக்கவேண்டும் என்று தனது தலைவர் சம்பந்தனிடம் குறிப்பிட்ட அரசியல் வாதி அடிக்கடி கூறியும் வந்திருக்கின்றார்.
பழைய அரசியல் வாதி தனக்கெதிராக செய்து வரும் சதியை அறிந்துகொண்ட யோகேஸ்வரன் அவர்கள் நேரடியாகவே குறிப்பிட்ட பழைய அரசியல்வாதியுடன் பல விடயங்களில் முரண்பட்டு வந்ததுடன், பலரிடமும் பழைய அரசியல் வாதியைப் பற்றி குறைகூறி வந்திருந்தார். கடந்த மாகாண சபைத் தேர்தல் காலத்தில்கூட அந்த பழைய அரசியல்வாதி தேர்தல் தினத்தன்று எந்தவொரு வாக்குப் பதிவு நிலையத்திற்கும் போகாத விடயத்தையும் யோகேஸடவரன் எம்.பி அவர்களே அம்பலமாக்கியிருந்தார்.  இவ்வாறு இரண்டு பாராளுமன்ற உறுப்பினாகளுக்குமிடையே ஏற்பட்டு வந்த முறுகல் நிலையின் ஒரு அங்கமே இன்றைய கைலப்பு நிலை என்று கூறப்படுகின்றது.
குறிப்பு :- பூபாளன் என்பவர் ஓர் அரச உத்தியோகஸ்த்தராக இருந்து கொண்டு அரசை நேரடியாக விமர்சிப்பதுடன் அரசாங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவராகவே செயற்படுகின்றார்.