12/19/2012

| |

வெள்ளத்தில் வந்தாறுமூலையின் சில பகுதிகள்

கிராமத்தின் சிலபகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிவருகின்றன. தொடர்ச்சியாக பெய்துவந்த கடும் மழை மற்றும் ஆற்றுவடிநில நீர் பாய்ந்துவருகின்றமை போன்ற காரணங்களினால் வந்தாறுமூலையின் பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கிவருகின்றன.
குறிப்பாக வந்தாறுமூலை கிழக்கு புகையிரத வீதிக்கு அருகாமையிலுள்ள பகுதிகள், வந்தாறுமூலை மேற்கு விளைநிலங்களை அண்டிய பகுதிகள் என்பன வெள்ளநீரினால் பாதிக்கப்பட்டு வருகின்றன.
 
 தற்போது க.பொ.த.சா.தரப் பரீட்சை இடம்பெற்று வருகின்ற இவ்வேளையில் இந்த தொடாமழை மற்றும் வெள்ளம் காரணமாக குறிப்பிட்ட பிரதேச மாணவர்கள் சிரமங்களின் மத்தியில் பரீட்சை எழுதி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.