உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

12/11/2012

| |

ஒரு பிரதேச சபையை கூட நிவர்வகிக்கமுடியாத கூட்டமைப்பு குப்பைகள்

த.தே.கூ உள்ளுராட்சி சபை வரவு செலவு திட்டம் கூட்டமைப்பு உறுப்பினர்களாலேயே நிராகரிப்பு


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமுள்ள வலி.தென் மேற்கு பிரதேச சபையின் வருடாந்த வரவு செலவுத் திட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களாலேயே நிராக்கப்பட்டு ஒரு மனதோடு தோல்வியடைச் செய்யப்பட்டுள்ளது. ஒரே கட்சிக்குள்ளே ஏற்பட்டுள்ள பாரிய பிளவு காரணமாக பொது மக்கள் பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

பிரதேச சபையினத் தலைவர் கடந்த மாதாந்த கூட்டத்தின் போது வரவு செலவு திட்டத்தை சபையில் சமர்ப்பித்தார். இதனை இன்னொரு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லி நிராகரிக்க முன்மொழிந்தார்.

இதனை எதிர்கட்சியான ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் உட்பட அனைவரும் ஒரு மனதாக நிராகத்தனர். இதனைத் தொடர்ந்து புதிய வரவு செலவு திட்டம் தயாரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.