12/10/2012

| |

பூம்புகார் லயன்ஸ் வீதியின் நிர்மாணப்பணிகள் ஆரம்பம்
பூம்புகார் 7ம் குறுக்கு லயன்ஸ் வீதியின் நிர்மாணப்பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. மிக மோசமான நிலையில் இருந்த இவ் வீதியானது  பொது மக்களின் வேண்டுகோளிற்கிணங்க தயத்த கிருல்ல வேலைத்திட்டத்தின் கீழ் கொங்கிரீட் வீதியாக நிர்மாணிக்கப்படுகின்றது.


மேற்படி நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரமேயர் சிவகீர்த்தா பிரபாகரன்,பிரதி மேயர் ஜோர்ச்பிள்ளை,தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதி செயலாளர் ஜெ.ஜெயராஜ்,கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
(படங்கள்-ஜனா)