12/04/2012

| |

ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட கலாசார விழா

ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தினால்  இவ்வருடத்திற்கான கலாசார விழா நேற்று (02.12.2012)  தன்னாமுனையிலுள்ள மியானி மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வினை ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் திரு. சி.உதயசிறிதர் அவர்கள் தலமை தாங்கி நடாத்தினார். 
 
இந்நிகழ்வில்  ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்ற சுமார் 200 இற்கும் மேற்பட்ட கலைஞர்களின் விபரங்களை உள்ளடக்கிய 'நானிலம்' எனப்படும் சிறப்பிதழ் வெளியிடப்பட்டதுடன், கலைஞர்கள் கௌரவிப்பு மற்றும் மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.