12/24/2012

| |

சேதமடைந்திருந்த பனிச்சங்கேணி பாலத்தை முன்னாள் முதல்வர் பார்வையிட்டார்.

மட்டக்களப்பு – திருகோணமலைக்கான பிரதான போக்குவரத்துப் பாதையில் அமைந்திருந்த பனிச்சங்கேணி பாலம் வெள்ளம் காரணமாக சேதமடைந்திருந்ததுடன், இப்பகுதியூடான போக்குவரத்தும் முற்றாகத் தடைப்பட்டுள்ளது.
இன்று (23.12.2012) முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஜனாதிபதியின் விசேட ஆலோசகருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன் அவர்கள் குறிப்பிட்ட பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலைமைகளை பார்வையிட்டார்.
முன்னாள் முதல்வருடன் ,  முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித் தலைவருமான நாகலிங்கம் திரவியம் (ஜெயம்) மற்றும் கோரளைப் பற்று வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சுரேஸ் அவர்களும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.