12/19/2012

| |

மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று குளங்களின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளது

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழையினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உன்னிச்சை குளம் உட்பட மூன்று குளங்களின் வான்கதவுகள் முழுமையாக திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிபபாளர் எஸ்.மோகனராஜ் தெரிவித்தார்.
மழை தொடர்ந்து பெய்து வருவதால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உன்னிச்சை குளத்தின் மூன்று வான்கதவுகளும், உறுகாமம் குளத்தின் இரண்டு வான்கதவுகளும், நவகிரி குளமும் திறந்து விடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து நீர்ப்பாசனக் குளங்களும் தொடர்ச்சியாக அதிகாரிகளினால் கவனிக்கப்பட்டு வருவதாகவும் நீர்ப்பாசன திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் எஸ்.மோகனராஜ் மேலும் தெரிவித்தார்.
UnnKul (1)UnnKul (2)UnnKul (3)