12/21/2012

| |

வேத்துச்சேனை கிராம மக்களுக்கு நிவாரண உதவி

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் வேத்துச் சேனையும் ஒன்றாகும். போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மேற்படி கிராமத்திலுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் பாய் என்பவற்றை முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று வழங்கி வைத்தார்.  
குறித்த கிராமத்திற்கான போக்குவரத்து மார்க்கம் பாதிக்கப்பட்டுள்ள வேளையிலும் நேரடியாக அக் கிராமத்திற்கு சென்று அம்மக்களோடு கலந்துரையாடி அவர்களுக்கான உதவிகளை தொடர்ந்து வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார். இந் நிகழ்வில் போரதீவப் பற்று பிரதேச சபையின் தவிசாளர் சிறிதரன் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன் கிராம சேவையாளர் ஆகியோர் கலந்து கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்தார்கள்.
குறிப்பு :- தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு இவ்வாறு ஓர் கிராமம் இருக்கா? என்று தெரியுமோ தெரியல என்கின்றார்கள் பிரதேச வாசிகள். பாவம் வெள்ளிமல மற்றும் அரியநேந்திரனாவது போய் பார்க்கிற இல்லையா? றோட்டில நின்று போட்டோக்கு மாத்திரம் போஸ் கொடுத்தா போதாதுடா சாமிங்களா....