12/06/2012

| |

இந்திய பாதுகாப்பு நிறுவன பகுப்பாய்வாளர் - கோட்டாபய சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியாவின் பாதுகாப்புக் கற்கைகள் மற்றும் ஆய்வு நிறுவனத்தின் பகுப்பாய்வாளர் அரவிந்த் குப்தாவுக்கும்  பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது என தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இந்த சந்திப்பில், இருதரப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக அந்நிலையம் அறிவித்துள்ளது.
இந்த சந்திப்பின் போது இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா மற்றும் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.