12/17/2012

| |

மட்டக்களப்பில் 'ரட்டவிருவோ' தினம் அனுஷ்டிப்பு

'ரட்டவிருவோ' எனப்படும் கடல் கடந்த வீரர்கள் தினம் மட்டக்களப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தையொட்டி 'ரட்டவிருவோ' எனப்படும் கடல் கடந்த வீரர்கள் தின வைபவம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாநகரசபை நகர மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் அமல் சேனாதி லங்கார தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், மட்டக்களப்பு மாநகரசபை ஆணாயாளர் கே.சிவநாதன், கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் பூ.பிரசாந்தன் உட்பட  பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது 'ரட்டவிருவோ' எனப்படும்  மட்டக்களப்பு மாவட்ட அமைப்பின் நிர்வாகிகள் தெரிவும் மேற்கொள்ளப்பட்டது.