12/24/2012

| |

பனிச்சங்கேணி , மாங்கேணி மக்களுக்கு முன்னாள் முதல்வர் உதவி
கோரளைப் பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மாங்கேணி மற்றும் பனிச்சங்கேணி கிராமங்களும் கடந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதனால்,  இக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாடசாலைகளில் தங்கியிருந்தனர்.
முன்னாள் முதலமைச்சரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஜனாதிபதியின் விசேட ஆலோசகருமான சிவனேசத்துரை சந்திகாந்தன் அவர்கள் நேரில் சென்று வெள்ளத்தால் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்களை பார்வையிட்டதுடன், பால்மா, பிஸ்கட் முதலிய உலர் உணவுப் பொருட்களையும் வழங்கி வைத்தார்.
இதன்போது முன்னாள் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித் தலைவருமான நாகலிங்கம் திரவியம் (ஜெயம்) அவர்களும், கோரளைப் பற்று வடக்கு வாகரை பிரதேச சபை தவிசாளர் சுரேஸ் அவர்களும் கலந்துகொண்டனர்.