12/21/2012

| |

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட படையாண்டவெளி மக்களுக்கு நிவராண உதவி

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட படையாண்ட வெளி மற்றும் பண்டாரியா வெளி கிராம மக்களுக்கு முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் நிவாரண உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
உலர் உணவுப் பொருட்கள் மற்றும் பாய்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன. பட்டிப்பளை பிரதேச சபையின் தவிசாளர் பேரின்பராஜா மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன், வவுணதீவு பிரதேச சபையின் பிரதி தவிசாளர் ஜெ.ஜெயராஜ் அகியோர் நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்தார்கள். மேற்குறித்த நிவாரண உதவிகள் முன்னாள் முதலமைச்சரின் சொந்த நிதி ஒதுக்கீடடின் மூலம் மேற்கொள்ளப்பட்டமை என்பது குறிப்பிடத்தக்கது.