உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

12/08/2012

| |

தேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் கொங்கிரீட் வீதி


தேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டத்தின் கீழ் கொங்கிரீட் வீதி அமைப்பதற்கான நிர்மாணப்பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. ஜனாதிபதியின் ஆலோசகர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களது பணிப்பின் பேரில், மிக மோசமான நிலையில் இருந்த கூழாவடி 8ம் குறுக்கு வீதியின் நிர்மாணப்பணிகளே இவ்வாறு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வில் மாநகரசபையின் பிரதி மேயர் ஜோர்ச்பிள்ளை, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பிரதி செயலாளரும்,வவுணதீவு பிரதேச சபையின் பிரதி தவிசாளருமான ஜெ.ஜெயராஜ்,கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,பிரதேசவாசிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.