1/10/2013

| |

வெள்ளத்தினால் மட்டு. மாவட்டத்தில் 142,674 பேர் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த நான்கு தினங்களாக பெய்த அடை மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் 38,177 குடும்பங்களை சேர்ந்த 142,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட மேலதிக செயலாளர் கே.விமலநாதன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும்  இந்த குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று மட்டக்களப்ப மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக 6,098 குடும்பங்களை சேர்ந்த 19,868 பேர் இடம்பெயர்ந்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர் என அவர் மேலும் குறிப்பிட்டார்.