உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

1/15/2013

| |

இலங்கையின் புதிய தலைமை நீதியரசராக மொஹான் பீரீஸ் பதவியேற்றார்

புதிய தலைமை நீதிபதியாக மொஹான் பீரிஸுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷஇலங்கையின் புதிய தலைமை நீதியரசராக முன்னாள் சட்டமா அதிபரும் அரசாங்கத்தின் மூத்த சட்ட ஆலோசகருமான மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைமை நீதியரசர் பதவியில் இருந்து ஷிராணி பண்டாரநாயக்க அரசாங்கத்தின் கண்டன பதவிநீக்க நடைமுறையின் கீழ் சென்ற வாரம் அகற்றப்பட்டதை அடுத்து புதிய தலைமை நீதியரசராக மொஹான் பீரிஸ் பதவி ஏற்றுக்கொண்டுள்ளார்.
சட்டத்தரணிகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் மொஹான் பீரிஸ் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ள சூழ்நிலையில், நாட்டின் உச்சநீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, ஷிராணி பண்டாரநாயக்க அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.