உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

1/18/2013

| |

வாழைச்சேனையில் வறுமையற்றதோர் இலங்கையை கட்டியெழுப்பல் செயலமர்வு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2013ம் ஆண்டிக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவில் 'வறுமையற்றதோர் இலங்கையை கட்டியெழுப்புதல்' என்ற விடயத்திற்கமைவாகவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைவாகவும் வாழ்வின் எழுச்சி  வேலைத்திட்டத்தை மேலும் பயனுள்ளதாக நடைமுறைப்படுத்துவதற்கு பிரதேச செயலகம் தோறும் அறிவூட்டல் நிகழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன.
இதற்கமைவாக நேற்று வாழைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கூட்டத்தை ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரமான சிவநேசத்துரை சந்திரகாந்தன்  ஆரம்பித்து வைத்தார்.
இந்த கூட்டத்தில் பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.பிரபாகரன் மற்றும் பிரதேச திணைக்களத் தலைவர்கள், கிராம அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள், பிரதேச செயலகத்தில் இணைக்கப்பட்டுள்ள பயிலுனர் பட்டதாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.