1/27/2013

| |

களை கட்டும் மாவீரர் வியாபாரம்

வியாபாரிகளால் வீழ்ந்த என் தலைவா வீரவணக்கம்.


பங்கு பிரிப்பும் படுகொலையும் இறுதிப்பாகம்.-சாத்திரி

கடந்த பகுதியில் பரிதிக்கும்  தலைமைச் செயலக  தமிழரசனிற்கும் நடந்த பேச்சு வார்த்தைகளின் பின்னர்  தலைமைச் செயலக்தினருடனான இணைவிற்கு  பரிதி ஒத்துக்கொண்டு அறிக்கை  வெளியிடுவதற்கு  முன்னராக  அதனைத் தடுத்து நிறுத்துவதற்காக   லண்டன்  தனத்திடம் இருந்தும்  சுவிஸ் ரகுபதியியாலும்   கொடுக்கப் பட்ட அழுத்தத்தை தொடர்ந்து  ஜெர்மனியில் இருந்த இரும்பொறை பிரான்சிற்கு  விரைந்து வந்ததும்  பரிதி சுட்டுக் கொல்லப் பட்டார் என்பதை பார்த்தோம். பரிதி சுட்டுக் கொல்லப் பட்ட சில நிமிடங்களிலேயே அனைத்துலக செயலகம் சார்ந்த  இணையத் தளங்கள்  இந்தக் கொலையை  தலைமைச் செயலகத்தை சேர்ந்தவர்களே செய்ததாக ஒரு தோற்றப் பாட்டை ஏற்படும் கடும் முயற்சியில் இறங்கியிருந்தார்கள். அதற்காக அவர்கள் அவிழ்த்த பொய் செய்திகள்தான்  பாரிசில் வினாயகம்  சுற்றி வழைத்து கைது. தமிழரன். கைது. கனி என்பவர் என்கிற  பரபரப்பு செய்திகள். இவை எல்லாவற்றையும் விட  அதிர்வு என்கிற அனைத்துலகத்தின்  அம்மம்மா குழல்(ஊதுகுழல் )இணையம் வெளியிட்ட செய்தியை பார்த்து  விழுந்து  விழுந்து சிரிப்பதா  அல்லது  கோவி  கோவி அழுவதா என்றே தெரியாதிருந்தது.

காரணம் அவர்களது செய்தியில்  வினாயfம் சுற்றி வழைத்து கைது  என்பதோடு செய்தியை உறுதிசெய்வதானால்  பிரெஞ்சு புலனாய்வு த் துறையோடு தொர்பு கொள்ளவும் என்று  077 என்று தொடங்கும் ஒரு இலக்கத்தையும் எழுதியிருந்தார்கள்.   அதை படிப்பவர்கள் பாவம் பிரெஞ்சு  புலனாய்வுத் துறை  அவர்களிற்கு  சாதாரண தொலைபேசி இணைப்பே இல்லை  கைத்தொலைபேசி   தான் பாவிக்கிறாங்கள் என்று நினைத்து விட்டு அந்த  இலக்கத்திற்கு போனடித்திருந்தால் இந்த இணைப்பு பாவனையில் இல்லையென்று  சொல்லியிருக்கும். அட பாவமே  பிரெஞ்சு புலனாய்வு துறையிடம் பணம் இல்லாததால்  தொலைபேசி கட்டணத்தை கட்டவில்லையென்று நினைத்திருப்பார்கள்.

அவர்களின் இந்த திட்டமும் பிசுபிசுத்து போக  அனைத்துலகச் செயலகத்தின் அடுத்த திட்டம்தான்  மீள இணையும் புலிகள் என்கிற ஒரு காணொளி.
இந்தக் காணொளியானது இறுதிக் கட்ட யுத்தத்தில்  நாட்டை விட்டு விட்டு வெளியேறி  அவுஸ்ரேலியா போவதற்காக இந்தோனோசியாவில்  தங்கி நிற்கும் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களால் தயாரிக்கபட்டிருந்தது. இவர்களிற்கு அனைத்துலகச் செயலகமே பணஉதவி செய்துவிட்டு அப்படியொரு காணொளியினை தயாரித்து அனுப்புமாறு கோரியிருந்தனர்.  காணொளியினை பார்ப்பவர்களிற்கு  அதனை தயாரித்ததன் நோக்கம் புரியும்.ஆனால்  பரிதியின் கெலையை பிரெஞ்சு காவல்த்துறை  ஆரம்பத்தில் மூன்று கோணங்களில் விசாரிக்க ஆரம்பித்திருந்தனர். அவை. 1) இலங்கை புலனாய்வுத் துறை.  2) உள் வீட்டு மோதல்கள் அதில் தலைமைச் செயலகம்.  அல்லது அனைத்துலக்கத்திற்கிடையேயான  குழு மோதல்.  விசாரணைகளின் ஆரம்பத்திலேயே   கொலை சம்பந்தமாக   பரிதியுடன் நெருக்கமாக  இருந்த பாம்புக் குழுவை சேர்ந்த  இருவர்  கைதானதும் தலைமைச் செயலகத்திற்கும் கொலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்று உறுதியாகிவிட்ட நிலையில்தான்  அடுத்ததாக அவர்களத விசாரணை  இலங்கை புலனாய்வு பிரிவா அல்லது அனைத்துலகத்தின்  உள்வீட்டு மோதலா? என்கிற கோணத்தில் விசாரணைகள் போய்க்கொண்டிருந்தது.  அப்பொழுதான்  பிரான்சின் முன்னணி பத்திரிகைகளில் ஒன்றான Le Parisienபத்திரிகையில் இலங்கையரசே  பரிதியின் கொலைக்கு பின்னால்  இருப்பதாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது.


ஆனால் இது போன்ற  அரசியல் கொலை பற்றிய செய்திகளில் தகவல் அடிப்படையாக  ஒரு விசாரணை  அதிகாரியை மேற்கோள் காட்டியோ அல்லது உள்துறை அமைச்சர் அல்லது அதன் குரல் தரவல்ல அதிகாரிகளை  மேற்காட்டியே செய்தி வெளியாவது  வழைமை. அதன் அண்மைய ஊதாரணம்  பாரிசில் படுகொலை செய்யப் பட்ட மூன்று குர்திஸ்தான் போராளிகள் பற்றிய செய்திகளை பிரெஞ்சு பத்திரிகைகள் வெளியிட்ட விதத்தினை படித்திருந்தவர்களிற்கு புரிந்திருக்கும். ஆனால் பரிதி பற்றி Le Parisienபத்திரிகையில் ஒரு மொட்டை செய்தியாகவே வெளிவந்திருந்தது. அதையெல்லாம் விட்டுவிடலாம்.  இந்தக் கொலையை இலங்கை  அரசே செய்தது என வைத்துக் கொள்வோம்.  அரசியல் கொலைகளை  கன கச்சிதமாக உளவுப் பிரிவுகள் மூலம் மேற்குலக நாடுகளும். இரஸ்யாவும்.  இஸ்ரவேலுமே இதுவரை செய்து முடித்திருக்கிறார்கள். அதற்காக அவர்கள் தங்கள் அனைத்து வளங்களையும் பாவித்திருப்பதோடு கொலை நடந்து பல வருடங்களின் பின்னர் அதனோடு சம்பந்தப் பட்டதொருவர்  ஓய்வு பெற்ற காலத்தில் ஒரு புத்தகத்தை எழுதினாலோ அல்லது ஏதாவது ஒரு பத்திரிகையாளர் பல வருடங்களாக  நோண்டி விடயத்தை வெளியே கொண்டு வந்தால்தான் வெளி வரும். அனால் அந்த உண்மைகள் வெளிவரும் போது அந்த விடயமே மறந்து போய்விட்டிருப்பதோடு  அதை வைத்து எந்த நியாயமும் கிடைத்ததும் இல்லை.இவங்கை போன்ற சிறிய நாடுகள் மேற்குலக நாடுகளிற்குள் புகுந்து அரசியல் கொலைகளை செய்வதற்கு துணிய மாட்டாது காரணம் கொலையை இலங்கையரசுதான் செய்ததென்று நேரடியாக உறுதிப் படுத்தப் பட்டால் பிரான்ஸ் போன்ற  பலமான நாடுகளிற்கு  தங்கள் நாட்டின் பாதுகாப்பு பிரச்சனையாகி  கெளரவ பிரச்சனையாகி அது இலங்கை மீதான அழுத்தத்தை கொடுக்கும் என்று தெரியாத அளவிற்கு  இலங்கையரசு முட்டாள் அல்ல .

அதுவும்  Le Parisienபத்திரிகையில் வெளி வந்தது போல் இலங்கையரசின் தூதரகம் நேரடியாக சம்பத்தப் பட்டிருக்காது. இலங்கைத் தூதரகத்திற்கே தெரியாமல் இலங்கை புலனாய்வுத்துறை  வேறு தரகர்கள் ஊடாக கூலிக் கொலையாளர்களை வைத்து நடத்தியிருக்கும். அப்படியே  தரகர்கள் ஊடாக கூலிக்கு ஆளை வைத்து  பிரிதியை கொலை செய்திருந்திருந்து பிரெஞ்சு புலனாய்வுத் துறை அதை கண்டுபிடித்திருந்தாலும்  பிரெஞ்சு அரசு  தமிழர்களிற்கு அநீதி நடந்து விட்டது என்று இலங்கை யரசை குற்றம் சாட்டவோ ஜ.நா சபையில் இலங்கைக்கெதிராக தீர்மானமோ. அல்லது தமிழீழத்தை வாங்கித் தரப் போவது கிடையாது. பிரான்ஸ் தன்னுடைய நலனிற்கு தேவையான ஏதோ ஒன்று இலங்கையிடமிருந்து  பெறமுடியுமானால்  இலங்கையரசுடன் பேரம் பேசி இலங்கையை அடிபணியவைத்து தன்னுடைய தேவையை  தீர்துக்கொள்ளும். அதே நேரம் பரிதி கொலைக்காக  நீதி கேட்டு கூட்டம் போட்டாலென்ன  பாரிசில் இருந்து  ஜ.நா சபைவரை பிரதட்டை  தூக்கு  காவடி  என்று எடுத்தால் கூட ஒன்றும் நடக்கப்போவதில்லை.காரணம் பரிதி பரிதி பிரான்சில் தடைசெய்யப் பட்டதொரு அமைப்பின் பிரதிநிதி என்பதோடு  பிரெஞ்சு காவல்த்துறையின் கண்காணிப்பில் இருக்கின்ற ஒரு முன்னை நாள் கைதி.

ஆனால் தற்சமயம் பரிதியின் கொலை விசாரணை உள்வீட்டு விவகாரம் என்கிற கோணத்திலேயே தான் போய்க்கொண்டிருக்கின்றது. கைதானவர்கள் பரிதியோடு நெருக்கமாக இருந்த ஒரு வன்முறைக் குழுவினர். பரிதி தலைமைச் செயலகத்துடன் இணைவதை விரும்பாத சுவிஸ் ரகுபதியும். லண்டன் தனமும் கொடுத்த அழுத்தத்தினால்  இரும்பொறையே  பாம்பு குழுவிடம் பரிதியை  போடச் சொல்லியிருக்கலாம். இப்படி நடந்ததை பிரெஞ்சு காவல்த்துறை உறுதி செய்தாலும்  செய்ததும் தமிழன் செத்ததும் தமிழன் . எனவேப கணக்கு தீர்த்தல் என்கிற  வகையில் இந்த கொலையை அடக்கி கைது செய்யப் பட்டவர்கள் விசாரணை கைதிகள் என்கிற பெயரிலேயே  ஆறு அல்லது ஏழு வருடங்கள் கழித்து எச்சரித்து விடுவித்து விடுவார்கள்.  அவர்கள் விடுவிக்கப்பட்ட செய்தி எந்த ஊடகத்திலும் வராது. ஆனால் உண்மையில்  என்ன நடந்தது என்பதனை  ஊடுருவி தேடல்கள் நடத்தி கண்டு பிடித்து கொலையை வெளியே கொண்டு வரும் அளவிற்கு எம்மவரின் எந்த ஊடகமோ  ஊடகர்களோ இல்லை.  எங்களை நாங்களே மகிழ்ச்சிப் படுத்த  எழுதும் ஊடகங்களும்   தலைப்பை மட்டும் மாற்றி விட்டு வெட்டி ஒட்டும் ஊடகங்கள் மட்டுமே எம்மிடம் உள்ளது.எனவே பரிதியின் கெலை என்பது  இன்னும் சில காலங்களில் மறக்கப்பட்டதொன்றாகவே மாறிவிடும்.

இது இப்படியிருக்க  அனைத்துலகச் செயலகம் அடுத்த கட்ட ஆயுதப் போரை நடத்தப் போவதாக கூறியிருப்பது தெய்வீகன் என்கிற  நபரை வைத்துத்தான்.தெய்வீகன் என்பவர் யாரென்று சுருக்கமாக பார்த்து விடலாம். இவர் புலிகள் அமைப்பில் ஒரு இளநிலை போராளி விமான ஓட்டியாக பயிற்சி பெறுவதற்காக புலிகள் அமைப்பினால்  கிழக்கு ஜரோப்பிய  நாடொன்றிற்கு அனுப்பி விமான ஓட்டிக்கான கல்வியும்  பயிற்சியும் பொற்றவர்  அதில் தேர்ச்சி பெறாததால்  திரும்பவும் வன்னிக்கு அழைத்து  புலிகளின் உள்ளக புலனாய்வு பிரிவில் இணைக்கப் பட்டிருந்தார். இறுதிகட்ட யுத்தத்தில் இவரே வழங்கலிற்கும் பொறுப்பாக இருந்தவர். புலிகள் அமைப்பின் இறுதி முயற்சியான ஆனந்த புரம் ஊடறுப்பு சமர் நடந்தவேளை  அதற்கு  தலைவர் பிரபாகரனே  நேடியாக நின்று கட்டளைகளை வழங்கியிருந்ததும் அது தோல்வியில் முடிந்து  புலிகள் அமைப்பின் முன்னணி தளபதிகளும் ஆயிரக்கணக்கான போராளிகளும் பலியானதோடு தலைவர் பிரபாரன்  உயிர் தப்பியிருந்தார். அந்த சண்டைக்காக மேலதிக ஆயுத மற்றும் காயமடைந்தவர்களிற்கான  அவசர மருத்துவ உபகரணங்களை வழங்குமாறு களத்தில் நின்றிருந்த தளபதிகள்  தெய்வீகனை தொடர்பு கொள்ள முற்பட்ட வேளை  தனது தொடர்புகள் அனைத்தையும் துண்டித்து விட்டு காணாமல் போயிருந்தவர். மீண்டும் 2010 ம் ஆண்டு தை மாதமளவில்  இந்தியாவில் மதுரையில் நடமாடத் தொடங்கியிருந்தார்.

 அவரோடு வெளியக புலனாய்வுத் துறையின் புகழேந்தி  மற்றும் தென்னவன் அல்லது கரிகாலனும் மதுரையில் தங்கியிருந்து புலிகளின் அனைத்துலக செயலகத்தின் வெளிநாட்டு கிளைகளோடு தொர்புகளை ஏற்படுத்தி தாங்கள் இன்னமும்  பலநூறு  போராளிகளுடன் வன்னி காடுகளிற்குள்ளேயே நிற்பதாகவும் மறு பக்கம் கிழக்கு மாகாண காட்டிற்குள்  ராமும் தங்களோடு தொடர்பில் இருப்பதாகவும்  ராமின்  தலைமையில் அடுத்த கட்ட தாக்குதல்களை நடத்துவதற்காக  தங்களிற்கு ஆயுதங்களை பெறுவதற்காகவும்  அத்தியாவசிய தேவைகளிற்காவும் நிதி உதவி கோரியிருந்தார்கள்.  அதை நம்பி அனைத்துலக செயலகமும் பணம் அனுப்பியிருந்தார்கள்.

அன்றைய காலகட்டத்தில் தென்னவன் என்கிற கரிகாலனும் என்னுடன் தொர்புகளை ஏற்படுத்தி கதைத்திருந்தார். பணத்தை அனுப்பிவிட்டிருந்த அனைத்துலகச் செயலகத்தினர் தாக்குதல் எதுவும் நடக்காததால் ஏமாற்றமடைந்து  ராமோடு தொடர்புகளை ஏற்படுத்தி ஏதாவது தாக்குதல் செய்தால் தான்  இங்குள்ள மக்கள் நம்புவார்கள்  அப்பொழுதான் பணம் சேகரித்து அனுப்பலாம் ஏதாவது தாக்குதலை  செய்யும்படி கேட்டிருந்தனர். ஆனால் இது வரை காலமும் தலைவரின் கட்டளைக்கிணங்கவே  தான்  தாக்குதல்களை நடத்தியதாகவும்  வெளிநாட்டிலிருந்து  வரும் கட்டளைகளிற்கிணங்க தன்னால் இயங்க முடியாது  தலைவரின் கட்டளை  வராமல்  தன்னால் எதையும் செய்ய முடியாதென  ராம் எவ்வித தாக்குதலையும் செய்ய மறுத்து  தெய்வீகனின் தொடர்பும் தனக்கு இல்லையென்று அவர்களிற்கு சொல்லிவிட்டிருந்தான். பின்னர் ராமிற்கும் எனக்கும் நடந்த உரையாடல்களின்போது அதை தெரித்திருந்தான். அன்றை கால கட்டத்தில் தான் இலங்கை வான்படையின் உலங்கு வானுர்தியொன்று காலநிலை காரணமாக  கட்டுப் பகுதியில் விபத்திற்குள்ளாக அதனை ராமின் தாக்குதலிற்குள்ளானதாக  வெளிநாடுகளில் பிரச்சாரம் செய்யவும் அனைத்துலகம் முயன்றிருந்தது. 

பின்னர் சில காலங்கள் தெய்வீகனின் தொடர்பு அறுந்து பேயிருந்ததோடு தென்னவன் (கரிகாலன் )பிரான்ஸ் வந்து சேர்ந்ததும் மீண்டும் அனைத்துலக செயலகம் மற்றும் பழைய வெளிநாட்டு கட்டமைப்பை சேர்ந்தவர்களோடு தொடர்புகளை ஏற்படுத்துகிறார். அப்பொழுது மீண்டும் என்னுடன்  ஒரு தொடர்பையும் ஏற்படுத்தியிருந்தார். இவர்தான்  தற்சமயம் அனைத்துலக செயலகத்தோடு சேர்ந்து நின்று  தெய்வீகனால் அடுத்த கட்ட ஆயுத போரை வழிநடத்த முடியும் என்று  அவர்களையும் நம்பவைத்து  தெய்வீகனோடு தொடர்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். ஆயுதப் போர் நடக்கிதா இல்லையா அனைத்துலகம் மக்களையும்... தெய்வீகன் அனைத்துலகத்தையும் ஏமாற்றுகிறாரா என்பதையெல்லாம் விட்டு விட்டு பார்த்தால். இறுதியாக  மாவீரர் தினத்தின் போது யாழ் பல்கலைக்கழகத்து  பிரச்சனைகளின் பின்னால் யாழில் பல மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர்  . பின்னர் அதன் தொடர்ச்சியாக தமிழ் நாட்டிலும் சில கைதுகள்  நடந்து செய்திகளில் வெளிவந்தவைதான்.  ஆனால் அதன் பின்னால் இருந்த தெய்வீகனும் புகழேந்தியும் தமிழ் நாட்டில் மதுரையில் சுதந்திரமாகத்தான் நடமாடுகின்றார்கள்.  அதாவது  இந்தியாவின்  இலங்கை மீதான அடுத்த  கட்ட மேலாதிக்க நடவடிக்கைகளிற்கு தொடர்ந்தும் பலியாக போவது நாங்களா??   அதற்கு அனுசரணை  புலிகளின் வெளிநாட்டு கிளைகளான அனைத்துலக செயலகமா??   இது கேள்வி மட்டும் தான்  பதில் எனக்கும் தெரியாது  காலம்தான் பதில் சொல்லும்.  

இறுதியாக ஒரு வியடம்  அனைத்துலகச் செயலக்த்தின்  டென்மார்க் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவானது  பிரியனின் தலைமையில் அண்மைக்காலமாக  டக்லஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி கட்சி ஊடாக தாயகத்தில் மக்களிற்கான உதவிகளை செய்து வருகிறார்கள். அதே போல சுவிஸ் இளையோர் அமைப்பும்  தமிழர் ஒருங்கிணைப்பக் குழுவும் தங்கள் பிரதிநிதிகளை  கிழக்கு மாகாணத்திற்கு அனுப்பி கிழக்கு மக்களிற்கு உதவுகின்றனர்.இந்த மாற்றம் வரவேற்கப்படவேண்டிய விடயம்.  இவர்களை முன் மாதிரியாக எடுத்து மற்றைய நாடுகளில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்பு குழுக்களும் வீணே  ஊருக்கு போகின்றவன் உதவி செய்பவன் எல்லோரையும் துரோகி என்றும் அடுத்த கட்ட ஆயுதப்போர் என்று கதைவிட்டு காலத்தை கடத்தாமல்   தாயகத்து மக்ககளிற்கான  உதவிகளை செய்து அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்திவிடுவதே இனிவரும் காலங்களில் செய்யக்கூடியதொன்றாகும்.செய்வார்களா????

கரிகாலன்(பிரான்ஸ்), குட்டி(டென்மார்க்) பிரியன்,(டென்மார்க்) தனம் (இலண்டன்), சிறீறவி'ஜெர்மனி) , அதிர்வு கண்ணன்(இலண்டன்)  பெஞ்சமின்(நோர்வே) அம்புறுஸ்(இத்தாலி..தற்சமயம் பிரான்ஸ்) ஆகியோரது பங்கு பிரிப்புக்கள் பற்றி இன்னொரு கட்டுரையில் தனியாக பார்க்கலாம்.  அதுவரை நன்றி வணக்கம்.நன்றி -அவலங்கள்