1/18/2013

| |

மக்களின் வறுமை ஒழிப்பில் குறித்த அதிகாரிகளினதும் இதயசுத்தியுடனான சேவைகள் மிகவும் முக்கியத்தும் பெறுகின்றது


எமது நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களினால் 2013ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் சமர்பிக்கப்பட்ட போது முன்மொழியப்பட்ட வறுமையற்றதோர் இலங்கைத் தேசத்தை உருவாக்குதல் என்ற சிந்தனையிலும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்; பசில் ராஜபக்ஸ அவர்களின் ஆலோசனையின் அடிப்படையிலும் வறுமையை முற்றாக ஒழிப்பதற்கான செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பிலான செயலமர்வு இன்று வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் இடம் பெற்றது.
வாகரைப் பிரதேச அபிவிருத்தி குழுத்தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் வாகரை மகா வித்தியாலயத்தில்; இடம்பெற்றது. இந் நிகழ்வில் வாகரைப் பிரதேச செயலாளர் செல்வி ஆர்.ராகுலநாயகி , மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல்; பணிப்பாளர் மற்றும் பட்டதாரிபயிலுனர்கள் சமுர்த்தி உத்தியோகஸ்தத்தர்கள் கிராம சேவை உத்தியோகஸ்த்தர்கள் திணைக்களங்களின் தலைவர்கள் பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் தவிநெகும திட்டத்தில் உள்ளவாங்கப்பட்டுள்ள பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
திட்டத்தின் நோக்கம் தொடர்பிலான விளக்கவுரை நிகழ்த்திய அபிவிருத்தி குழுவின் தலைவர் சி. சந்திரகாந்தன் குறிப்பிடுகையில், நாட்டிலுள்ள வறுமையை முற்றாக ஒழிக்க வேண்டுமாயின் அது வறுமையானவர்களின் கைகளிலே தங்கி உள்ளது எனக் குறிப்பிட்டார். அதாவது கிராம மட்டத்திலிருந்து நாட்டில் வறுமையை முற்றாக ஒழிப்பதற்கான ஓர் சிறந்த திட்டமாக திவிநெகும திட்டம் திகழ்கின்றது. இதனூடாக வழங்கப்படுகின்ற உதவித்திட்டங்கள் மற்றும் கருத்துரைகளை தெளிவாக விளங்கிக் கொண்டு அதனை உரிய முறையிலே பயன்படுததி அதன் பயனை முழுமையாகப் பெறவேண்டும்.
மாறாக அக்கறை அற்ற விதத்தில் செயற்படுவோமாயின் அதன் முழுப்பயனையும் பெற முடியாது போய் விடும். எனவே எங்களது பிரச்சினைக்கான தீர்வு எங்களது கைகளிலே உள்ளது. அதனை நாமே புரிந்து கொண்டு சரியாக செயற்படுத்த வேண்டும். இது மாத்திரமன்றி வாகரைப் பிரதேசத்தினைப் பொறுத்த வரையில் மட்டக்களப்பு மாவட்டத்திலே மிகவும் கஸ்டப் பிரதேசமாக இது திகழ்கின்றது. அதாவது வறுமை இப் பிரதேசத்தில்தான் அதிகம் காணப்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இதற்கு அடிப்படைக் காரணம் அரசதொழிலுள்ளவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு இருந்த போதிலும் கல்வி அறிவும் மிகமிக குறைவாகவே காணப்படுகின்றது.
எனவே இப் பிரதேச  மக்களின் வறுமை ஒழிப்பில் குறித்த அதிகாரிகளினதும் இதயசுத்தியுடனான சேவைகள் மிகவும் முக்கியத்தும் பெறுகின்றது. அவர்களது நடவடிக்கைகைளை தொடர்ந்து கவனிப்பவர்களாக பொறுப்பான அதிகாரிகள் இருப்பார்களானால் உண்மையில் இத்திடட்டம் வெற்றியளித்து வறுமையற்ற பிரதேசமாக வாகரைப் பிரதேசத்தை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை தனக்குள்ளதாகவும்  அவர் தனது விளக்கவுரையில் குறிப்பிட்டார்.