உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

1/08/2013

| |

மட்டக்களப்பில் மீண்டும் தொடர் மழை


மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் தொடர் மழை பெய்து வருவதால் தாழ் நிலங்களில் வாழும் மக்கள்  பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
மழைக் காரணமாக மட்டக்களப்பு மாட்டத்தின் பெரும்பாலான கிராமங்களின் உள்வீதிகள் மழை நீரினால் மூழ்கப்பட்டுள்ளன.
களுவாஞ்சிகுடி பிரதேசத்தின களுதாவளை, செட்டியாளையம், தேற்றாத்தீவு, எருவில், மாங்காடு போன்ற பல கிராமங்களிலும் கோவில்போரதீவு, முனைத்தீவு, பட்டாபுரம், பழுகாமம், வேத்துச்சேனை, றாணமடு. போன்ற கிராமங்கிலும் பட்டிப்பளை பிரதேசத்தின் அம்பிளாந்துறை, பண்டாரியாவெளி, படையாண்டவெளி, மகிழடித்தீவு போன்ற பலகிராமங்களிலும் அதிகளவாள மழை நீர் தேங்கியுள்ளது.
இப்பகுதியிலுள்ள குளங்கள், வாய்க்கால்களில் நீர் நிரம்பியுள்ளதால் நீர்வழிந்தோடுவதற்கு வசதியின்மை காணப்படுவதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். 
இதேவேளை, போரதீவுப்பற்று பிரதேசத்தின் சின்னவத்தைக் கிராமத்து மக்கள் தமது அன்றாட தேவையினை பூர்த்தி செய்வதற்காக போக்குவரத்து வெய்வதற்கு நவகிரி ஆற்றுக்கு குறுக்கே இட்டுள்ள பாலத்தினைக் கடந்தே செல்ல வேண்டும்.
தற்போது இந்த பாலம் மழை நீரினால் மூடப்பட்டுள்தானால் தோணிமூலம் தமது போக்குவரத்தினை மக்கள் மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.