1/11/2013

| |

சவூதிக்கான இலங்கைத் தூதுவர் மீள அழைக்கப்பட்டார்

சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் அரசாங்கத்தினால் மீள அழைக்கப்பட்டுள்ளார்.
இலங்கைப் பணிப் பெண் ரிசானா நபீக்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு அரசாங்கம், தூதுவர் அஹமட் ஜவாட்டை மீள அழைத்துள்ளது.
ரிசானாவிற்கு மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேரடியாக இரண்டு தடவைகள் கோரியிருந்தார்.
இதற்கு மேலதிகமாக வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட நாட்டின் முக்கிய அமைச்சர்கள் அதிகாரிகள் பலர் சவூதி அரேபிய அரசாங்கத்திடம் தண்டனையை ரத்து செய்யுமாறு கோரியிருந்தனர்.
எனினும். இந்தக் கோரிக்கைளை நிராகரித்த சவூதி அரேபிய நீதிமன்றம் நேற்று ரிசானாவிற்கான மரண தண்டனையை நிறைவேற்றியது.
சவூதி அரேபியாவின் இந்த நடவடிக்கை எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் இலங்கை அரசாங்கம் அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவரை மீள அழைத்துள்ளது.