உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

2/07/2013

| |

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 8 ஆவது பட்டமளிப்பு விழா

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 8 ஆவது பட்டமளிப்பு விழா நேற்று 2013.02.06ம் திகதி இப் பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகத்தில் நடைபெறுகின்றது.
இப்பட்டமளிப்பு விழாவில் 416 உள்வாரி பட்டதாரிகளும் மற்றும் 170 வெளிவாரி பட்டதாரிகளுமாக மொத்தமாக 586 பட்டதாரிகளுக்கான பட்டமளிப்பு விழா நடைபெறுகின்றது.
இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக உயர் கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுணில் ஜெயந்த நவரத்ன கலந்து கொண்டார். ஸ்தாபக உபவேந்தர் பேராசிரியர் எம்.எல்.ஏ. காதர்.கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர், பிரதேச செயலாளர்கள், உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள், மாவட்ட வைத்திய அதிகாரிகள், நிறுவனத் தலைவர்கள், மதத்தலைவர்கள் கௌரவ அதிதிகளாகவும் பட்டதாரிகள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.