2/06/2013

| |

இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண்களுக்கு வீடுகள் அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த தமிழ் பெண்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கும் வேலைத் திட்டமொன்று ஆரம்பித்து வைக் கப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக 20 வீடுகளை புதிதாக நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி, கிருஷ்ணபுரம் கிராம சேவகர் பிரிவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இராணுவத்தின் 571 வது படையணியின் கட்டளைத் தளபதி கேர்ணல் நிஹால் அமரசேகர அடிக்கல் நாட்டினார்.
வீடொன்றுக்கு சுமார் ஐந்து இலட்சம் ரூபா செலவு செய்து இராணுவத்தின் ஆளணி மற்றும் உபகரணங்களை பயன்படுத்தி இந்த 20 வீடுகளும் முற்றிலும் இலவசமாக நிர்மாணித்து கொடுக்கப்படவுள்ளன.
கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த 101 தமிழ் பெண்கள் அண்மையில் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப் பட்டனர். இவர்களில் 45 பேர் வீடுகள் அற்றவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
முதற்கட்டமாகவே 20 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. கிளிநொச்சி பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உபய பெரேராவின் ஆலோசனைக்கமைய இராணுவத்தின் 57 வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி பிரிகேடியர் சுராஜ் பன்ஷா ஜாயாவின் வழிகாட்டலில் இந்த வீடமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
சுமார் ஆறு மாத காலப்பகுதிக்குள் புதிய வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன.