2/13/2013

| |

ஆபத்து ஆபத்து ஆபத்து *விஸ்வ இந்து பரிஷத்தின் இலங்கை வருகை


உலகில் எங்கெல்லாம் இந்துக்கள் வாழ்கின் றனரோ அங்கெல்லாம் இந்து சமயத்தின் தத்துவங்கள் ஆழ ஊடுருவி தமது வலிமையை, பலத்தைப் பற்றி பேச ஆரம்பித்தது என்பது சுவாமி விவேகானந்தரின் திடகாத் திரமான உரைகளின் பின்பே, சுவா மியின் வருகையாலே இந்தியாவும், இந்து சமயமும் புத்துணர்ச்சி பெற்றது.
இவ்வாறு கொழும்பில் கோலாகல மாக நடைபெற்ற சுவாமி விவே கானந்தரின் 150 வது ஆண்டு ஜனன தின விழாவின் அகில இலங்கை எழுச்சி விழாவில் பிரதான சொற் பொழிவாளராக கலந்துகொண்ட தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத், துணைத் தலைவர் ஆர். பி. வி. எஸ். மணியன் உரையாற்றுகையில் தெரிவித்தார். சுமார் 20 ஆயிரம் மக்கள் கலந்துகொண்டனர்.
மேற்படி விழா விழாக் குழுத் தலைவரும், கொழும்பு ஸ்ரீ பொன் னம்பல வாணேஸ்வரர் தேவஸ்தான அறங்காவலருமாகிய டி. எம். சுவாமிநாதன் தலைமையில் கொழும்பு 5 சாலிஹா மைதான த்தில் ஞாயிறன்று பிற்பகல் மிக வும் கோலாகலமாக நடைபெற்றது.
முன்னதாக எழுச்சி ஊர்வலமும், மைதானத்தில் கண்காட்சியும் நடைபெற்றன. அதிதிகள் முதல் பலரும் பங்கேற்றனர்.
விழாவில் அமைச்சர்களான ஆறுமுகன் தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம், மாகாண அமைச்சர்களான செந்தில் தொண் டமான், அனுஷியா சிவராஜா, பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் எம்.
சந்திரகுமார், பாரா ளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் விழா மேடையில் வீற்றிருந்தனர். சமய தலைவர்களும், விழாக் குழுவினருமிருந்தனர்.
கொழும்பு. இ. கி. மி. தலைவர் சுவாமி சர்வரூபானந்தா மஹராஜ் சுவாமி விவேகானந்தரின் திருவுரு வப் படத்திற்கு புஸ்பாஞ்சலி செய்து ஆசியுரை வழங்கினார். சுவாமி இராஜேஸ்வரானந்தா மஹராஜ் தேவாரத்துடன் கூடிய பஜனை பாடினார்.
வரவேற்புரையை விழாக் குழுச் செயலாளர், வரலாற்று ஆய்வாளர் என். கே. எஸ். திருச்செல்வம் நிகழ் த்த, இந்து ஸ்வயம் சேவக சங்க அறிக்கையை விசேட இணைப்பாளர் ஆர். விஜயபாலன் நிகழ்த்தினார்.
பெளத்த துறவியான அமரபுரநிகாய தேரர் ஞானீஸ்வரர் ஆசியுரை வழங்கினார்.
விழாவில் அகில பாரத சுவாமி விவேகானந்தர் 150 வது ஆண்டு விழாப் பொதுச் செயலாளர் பேராசிரியர் அனிருத்த தேஷ்பாண்டே, தென்பாரதச் செயலாளர் எஸ். இராஜேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
அங்கு மணியன் மேலும் சொற் பொழிவாற்றுகையில் :-
'உலகின் தாய் மதம் இந்து மதம். உலகில் 100 கோடி இந்துக்கள் வாழ்கிறார்கள். எவன் ஒருவன் தனது வலிமையை உணருகின்றானோ அவன் தன்னம்பிக்கையைப் பெறுகிறான் என்ற உண்மையான செய்தியை உலகிற்கு வழங்கியவர் சுவாமி விவேகானந்தர் அவர்கள்.
1892 இல் கன்னியாகுமரியில் கடல் நடுவே பாறையொன்றிலே தியானம் செய்த வேளை இந்துக்க ளின் எதிர்காலம் பற்றி கனவு கண் டார். அதனைச் செயற்படுத்தியும் காட்டினார்.