2/04/2013

| |

சித்திரைக்கு பின்னர் இரு சபைகளுக்கு தேர்தல்

தமிழ்-சிங்கள சித்திரை புத்தாண்டுக்கு பின்னர் இரண்டு மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.
மத்திய மற்றும் வடமேல் ஆகிய இரு மாகாண சபைகளுக்குமான தேர்தலே மே மாதம் நடுப்பகுதியில் நடத்தப்படவிருக்கின்றது.
குற்றப்பிரேரணை மற்றும் அமைச்சரவை மாற்றத்திற்கு பின்னர் அரசாங்கம் தொடர்பில் மக்கள் கொண்டிருக்கின்ற நிலைப்பாட்டை பரிசோதிக்கும் வகையிலேயே இந்த இரு மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன.
இரு மாகாண சபைகளுக்குமான பதவிக்காலம் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிறைவடையவிருக்கின்ற நிலையிலேயே 7 மாதங்களுக்கு முன்னர் இரு மாகாண சபைகளையும் கலைத்து தேர்தல் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனை தொடர்ந்து ஓகஸ்ட் மாதம் மேல் மற்றும் வட மாகாண சபைகளுக்கான தேர்தல்களையும் 2014 ஆம் ஆண்டு ஊவா மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலும் அதற்கு பின்னர் நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துவதற்கே அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறான திட்டத்தின் அடிப்படையிலேயே அமைச்சரவையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது