2/05/2013

| |

பல்கலைக்கழகங்களுக்கு புதிய கோட்டா முறை

தற்போது பல்கலைக்கழக அனுமதியிலுள்ள மாவட்ட கோட்டா முறையை மாற்றி கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுக்கு அமைய புதிய முறையை அறிமுகம் செய்வது தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது.
1973 மற்றும் 1974 ஆம் ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்ட தரப்படுத்தலை தமிழ் அரசியல்வாதிகள் முழுமையாக எதிர்த்தனர். இதுவே தமிழ் தீவிரவாதத்திற்கு வித்திட்டது. இதனால் பலரும் கருகினர்.
தற்போது 40 சதவீதத்தினர் திறமை அடிப்படையிலும் 55 சதவீதமானோர் மாவட்ட கோட்டா முறையிலும் 5 சதவீதமானோர் பின்தங்கிய மாவட்ட கோட்டா அடிப்படையிலும் தெரிவாகினர்.
மாவட்ட கோட்டாவானது 1993 இல் நடந்த சனத்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றது. இதனால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள 'கோட்டா' பின்னர் ஏற்பட்ட சனத்தொகை மாற்றத்தை கணக்கில் எடுக்கவில்லை. என பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
வடக்கில் தற்போது சனத்தொகை பாரிய வீழ்ச்சிக்கண்டுள்ளது. இருப்பினும் வடக்கு 1993 ஆம் ஆண்டு சனத்தொகை அடிப்படையிலான உயரளவு கோட்டாவை அனுபவித்து வருகின்றது. 1993 இல் யாழ்ப்பாணத்தில் 7 இலட்சம் பேர் இருந்தனர். அந்த சனத்தொகை தற்போது 4 இலட்சமாக தற்போது வீழ்ச்சிக்கண்டுள்ளது.
இந்த மாற்றமான நிலைமை கொழும்பிலும் காணப்பட்டுள்ளது. அதாவது, கொழும்பில் சனத்தொகை பல்வேறு காரணங்களினால் அதிகரித்துள்ளது. ஆனாலும் கொழும்புக்கான பல்கலைக்கழக அனுமதி குறைந்த கோட்டாவையே பெற்றுவருகின்றது.
இது பற்றி உயர்க்கல்வி அமைச்சின் செயலாளருடன் தொடர்பு கொண்டுக்கேட்டபோது எந்தவொரு சமூகத்திற்கும் அநீதி இழைக்காதமுறையில் புதிய அனுகுமுறை படிப்படியாக அமுல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.