2/07/2013

| |

உலக வங்கியினால் நடாத்தப்பட்ட போட்டியில் தெற்காசியாவில் மட்டக்களப்பு மாணவன் வெற்றி

Sayanபட்டிருப்பு தேசியபாடசாலையில் தரம் - 12 விஞ்ஞானப்பிரிவில் கல்விகற்று வரும் திவ்வியராஜ் சயந்தன் உலக வங்கியினால் இணையமூலம் நடாத்தப்பட்ட“Global Picture Contest “ எனும் போட்டியில் வெற்றி பெற்று உலக சாதனை புரிந்துள்ளார். இவர்  களுவாஞ்சிகுடி, சக்கடத்தார் வீதியில் வசித்து வருகிறார்.
“Global Picture Contest “எனும் போட்டி ஆபிரிக்கா, கிழக்கு ஆசியா/பசுபிக், மத்திய ஆசியா/ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா/கரிபியன், மத்தியகிழக்கு/வடஆபிரிக்கா, தென் ஆசியா எனும் 6 பிராந்தியங்காளாக நடாத்தப்பட்டது. இப் பிராந்தியங்களில் தெற்காசியப் பிரிவில் திவ்வியராஜ் சயந்தன் பரிசு பெற்றுள்ளார்.; இவர் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலக கணனி வள முகாமையாளர் செல்லத்துரை - திவ்வியராஜ் -  ஆசிரியர் அனுசூயா அவர்களின் சிரேஸ்ட்ட புதல்வராவார்.
இவர் தன்னால் போட்டிக்கு அனுப்பப்பட்ட புகைப்படத்திற்கு பின்வருமாறு விளக்கமும் அளித்துள்ளார். ' இலங்கையின் களுவாஞ்சிகுடிக்கும் கல்முனைக்குச் செல்லும் பிரதான வீதியின் களுவாஞ்சிகுடியில் தெருவோர வியாபாரிகள் நிறையப்பேர் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றவர்களுள்; தனது வீட்டுவறுமை காரணமாக தேங்காய் விற்கும் சிறுவனும் ஒருவன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இவருடை போட்டிக்குரிய படத்தினை பின்வரும் இணைய முகவரியில் பார்வையிடலாம்