Election 2018

2/06/2013

| |

கிழக்கு பல்கலை.யில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிட தொகுதியையும் நல்லையா மண்டபத்தையும் ஜனாதிபதி திறந்துவைப்பு!

வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்ட விஞ்ஞானபீடத்தின் விலங்கியல்துறை கட்டிடத் தொகுதியையும் நல்லையா மண்டபத்தையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று  செவ்வாய்க்கிழமை வைபவ ரீதியாக திறந்து வைத்தார். 
ஹெலிகொப்டரில் வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக மைதானத்தில் வந்திறங்கிய ஜனாதிபதியை உயர் கல்வியமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, அமைச்சர் பஷீர் சேகுதாவூத்; பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா உள்ளிட்ட அதிதிகள் வரவேற்றனர்.
இதன்போது குறித்த பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடியதுடன், அவர்களுடைய குறை-நிறைகளையும் கேட்டறிந்து விலங்கியல் ஆய்வுகூடத்தையும் பார்வையிட்டார்.