உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

2/11/2013

| |

போரதீவுப்பற்று பிரதேசசபையின் புதிய அலுவலகத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

போரதீவுப்பற்று பிரதேச சபை புதிய அலுவலக கட்டிட அடிக்கல் நாட்டு விழா கடந்த 08.02.2013 அன்று  விமர்சையாக வெல்லாவெளியில் நடைபெற்றது.   இவ்விழாவிற்கு   போரதீவுப்பற்று பிரதேச சபை     தவிசாளர்   வி.சிறிதரன் தலைமை வகித்தார்.
பிரதம அதிதியாக முன்னாள் முதல்வரும், கிழக்கு  மாகாண சபை  உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தன்  மற்றும் கௌரவ அதிதிகளாக பிராந்திய உள்ளுராட்சி உதவி    ஆணையாளர் திருமதி.ந.சத்தியானந்தி மற்றும் வெல்லாவெளி பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினம மற்றும்  விசேட  அதிதிகள்  சிறப்பு அதிதிகள் பொதுமக்கள் இன்  நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.  இங்கு கருத்து தெரிவித்த சி.சந்திரகாந்தன்,பல கோடி ரூபா செலவில் அமையப்பெற இருக்கின்ற இந்த பிரதேச சபை கட்டிடமானது எமது மக்களின் எதிர்காலத் தேவைகளை   இலகுவாக செய்து முடிக்கக் கூடியவாறு அமையவேண்டும்மென்பதே எனது விருப்பம்;. நாங்கள் அனைவரும் கட்சி  பேதமின்றி    எங்களது
அபிவிருத்திப்பணிகளை செய்ய முன்வரவேண்டும் என்றார்.