3/02/2013

| |

கவிஞர் ஞானமணியத்தின் 'மரபு நாதம் ஒலிக்கும் மதுரகானம்'

''மரபு நாதம் ஒலிக்கும் மதுரகானம்' எனும் கிராமிய மணம் கமழும் இசை நிகழ்வு ஒன்று எதிர்வரும் 03.03.2013 ஞாயிறு அன்று 10.00 மணி தொடக்கம் திருப்பழுகாமம் விபுலானந்தா வித்தியாலயத்தில் அதிபர் வே. அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெறவுள்ளது.
சுப்பிரமணிய பாவலன் கிராமியக்கலைஞர் - கவிஞர் ஞானமணியம் அவர்களது சாதனைப் படைப்பான ' மரபுநாதம்' நூலிலும், விபுலானந்த அடிகளாரின் 'நூற்றாண்டுப் பாமலர்' நூலிலும் வெளிவந்துள்ள இரம்மியமான சில பாடல்களை கவிஞர் ஞானமணியம்
அவர்கள் பாடுகிறார். இவருடன் இசைக்கலைமாமணி திருமதி அழகம்மா பேரின்பநாதன் மற்றும் இசையிளங்கலைஞன் எஸ். கோபி ஆகியோரும் இணைந்து பாடுகின்றனர். க.தேவராஜ், மகா. தேவதீசன் ஆகியோர் இசை வழங்க மு.ஜசோகரன் ஒலிப்பதிவு செய்கிறார்.
கவிஞர் ஞானமணியம் அவர்கள் இலண்டன் மாநகரில் சுமார் இருபத்தைந்து ஆண்டு காலமாக 'பழந்தமிழ்க் கலை இணையம்' (LONDON - ANCIENT TAMIL ARTS LINK ) என்னும் கலையரங்கினை ஸ்தாபித்து நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.