3/02/2013

| |

அம்பாறையில் அதிகளவு நெல் கொள்வனவு

அரசாங்கத்தின் நெல் கொள்வனவு திட்டத்தின் கீழ் இதுவரை 3920 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
தற்போது 76 மத்திய நிலையங்கள் ஊடாக நெல் கொள்வனவு இடம்பெறுவதாக சபையின் தலைவர் K.P.ஜயசிங்க கூறினார்.
பொலனறுவை, அநுராதபுரம், ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில் இந்த மத்திய நிலையங்கள் திறக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இம்முறை அம்பாறை மாவட்டத்திலேயே அதிகளவு நெல் கொள்வனவு இடம்பெற்றுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை குறிப்பிட்டது.
அம்பாறை மாவட்டத்தில் 560 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.