3/04/2013

| |

சாவெஸ் உயிருக்கு போராட்டம்

வெனிசுவெலா ஜனாதிபதி ஹுகொ சாவெஸ் தொடர்ந்து புற்று நோய்க்காக சிகிச்சை பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் உயிருக்காக போராடி வருவதாக அந்நாட்டு அரச தொலைக்காட்சி சனிக்கிழமை செய்தி வெளியிட்டது.
சாவெஸ் சத்திரசிகிச்சைக்கு பின்னர் கியூபாவில் இருந்து நாடு திரும்பியபோதும் தலைநகர் கரகாசில் இருக்கும் இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு துணை ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒக்டோபரில் இடம்பெற்ற தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியாக தேர்வான சாவெஸ் கடந்த மாதம் கியூபாவிலிருந்து நாடு திரும்பினார். எனினும் அவரது உடல் நிலை குறித்து தெளிவான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
எனினும் சாவெஸ் கடுமையான மருத்துவ சோதனைக்கு உட்பட்டிருப்பதாகவும் ஆனால் அவர் முன்னரை விடவும் உறுதியாகவுள்ளதாகவும் வெனிசுவெலா துணை ஜனாதிபதி குறிப்பிட்டார். மறுபுறத்தில் சாவெசின் உண்மையான நிலைவரத்தை வெளியிடும்படி கோரி மாணவர்கள் தலைநகரில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்