உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

3/15/2013

| |

'வேடுவர்களின் உரிமைகளும் ஐநா தீர்மானத்தில் வரவேண்டும்'

ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரங்கள் குறித்து அமெரிக்காவினால் கொண்டுவரப்படும் தீர்மானத்தில், இலங்கையின் பழங்குடியின மக்களான வேடுவர்களின் உரிமைகள் குறித்தும் வலியுறுத்தப்பட வேண்டும் என்று சவர்வைல் இண்டர்நாஷனல் என்னும் சர்வதேச அமைப்பு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் வேடுவர்களின் பாரம்பரிய வதிவிடங்கள் சிங்கள குடியேற்றவாசிகளால் அத்துமீறல்களுக்கு உள்ளாக்கப்படுவதாகவும், தமது பாரம்பரிய காடுகளில் தமது தேவைகளுக்காக வேட்டையாடுவதற்கு வேடுவர்கள் தடுக்கப்படுவதாகவும், தமது உறைவிடங்களான காடுகளை அவர்கள் இழந்துள்ளதாகவும் கூறுகிற அந்த அமைப்பு, இது குறித்து இலங்கை அரசாங்கங்களால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் எதுவும் சரியாக நிறைவேற்றப்படவில்லை என்றும் கூறுகிறது.
இலங்கையில் தற்போதைய நிலைமைகளில் வேடுவ இனத்தவர்கள், வழமையான காடுகளை இழத்தல், பாரம்பரிய வதிவிட உரிமை, வேட்டையாடுவதற்கான உரிமை அகியவற்றை இழத்தல் என்பவற்றுடன், தமிழ் பகுதிகளில் வாழும் வேடுவர்கள் போரினால் ஏற்பட்ட பல பிரச்சினைகளையும் எதிர்கொள்வதாகக் கூறுகிறார், வேடுவர்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்ட மானுடவியல் ஆய்வாளர் விஜய் எட்வின்.